ராமாயணம் தமிழ் ட்ரெய்லர் வெளியீடு: இலங்கை மக்களுக்கு மிகவும் நெருக்கமான கதை!
ட்ரெய்லரை இங்கேயே பாருங்கள்:
நமித் மல்ஹோத்ராவின் "ராமாயணம்" படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகிவிட்டது! நிதேஷ் திவாரி (Dangal படத்தை இயக்கியவர்) இயக்கத்தில் உருவாகும இந்த இரண்டு பாக பெரிய படம், இந்திய சினிமாவன் மிகப் பெரிய முயறசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இலங்கைக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு?
ராமாயணம் என்பது வெறும் இந்திய கதை இல்லை — இது இலங்கை மண்ணோடு நேரடியாக பின்னிப் பிணைந்த கதை. இராவணன் இலங்கையின் அரசனாக இருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. சீதையை இராவணன் அழைத்து வந்தது, அசோக வனத்தில் அவளை வைத்திருந்தது, ராமர் பாலம கட்டி இலங்கைக்கு படையெடுத்தது — இந்த நிகழ்வுகள எல்லாம் இலங்கை பூமியில் நடந்ததாக நம்பப்படகிறது. இன்றும் இலங்கையில் சீதா எலயா, அசோக வாடிகா, இராவண எல்லா போன்ற இடங்கள் இந்த கதையன் நினைவுச் சினனங்களாக இருக்கின்றன. அதனால் இந்த படம் இலங்கை மக்களக்கு வெறும் திரைப்படம் இல்லை, அவர்களது சொந்த மண்ணின வரலாறு!
கதை என்ன சொல்கிறது?
வனவாசம் சென்ற ராமன், அவனுடைய மனைவி சீதை இராவணனால் கடத்தப்படும் நிகழ்வு வரை இந்த முதல் பாகம் நகர்கிறது. நல்லது கெட்டதுக்கு இடையேயான போர் இதன் மூலம் தொடங்குகறது. மீட்பு பயணமம், இறுதி போரும் இரண்டாம் பாகத்தில் வரும்.
நடிக்கும் நடிகர்கள்
- ரன்பீர் கபூர் – ராமனாக
- யாஷ் – இராவணனாக
- சாய் பல்லவி – சீதையாக
- சன்னி டியோல், ரவி துபே, காஜல் அகர்வால், அருண் கோவில், லாரா தத்தா உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். 25க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றன.
படத்தின் தயாரிப்பு விவரங்கள்
- இசை: ஆஸ்கார் விருது பெற்ற ஹான்ஸ் ஜிம்மரும், ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
- விஷுவல் எஃபெக்ட்ஸ்: Dune, Interstellar, Inception படங்களுக்கு பணியாற்றிய DNEG நிறுவனம்.
- படப்பிடிப்பு: முழுவதும் IMAX தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
- இது Namit Malhotra-வின் Prime Focus Studios மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகிறது.
எப்போது வெளியாகும்?
ராமாயணம் பாகம் 1 இந்த தீபாவளி 2026 உலகம் முழுவதும் வெளியாகும். பாகம் 2 தீபாவளி 2027 வெளிவரும். ராமர் இலங்கை மேல் வெற்றி பெற்று அயோத்திக்கு திரும்பிய நாளையே தீபாவளியாக கொண்டாடுவதால், இந்த வெளியீட்டு தேதி தேர்வும மிக பொருத்தமானதாக உள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்த்து உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்!
Comments
Post a Comment